உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்: இஷாரா செவ்வந்தி விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்ற உத்தரவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி மீதான விசாரணைகளை விரைந்து நிறைவு செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதராகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதிமன்றம் கடும் அறிவுறுத்தல் வழங்கியது.


இவ்வழக்கின் 15வது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாததை நீதிவான் சுட்டிக்காட்டியதுடன், “சந்தேகநபரைத் தடுத்து வைத்திருப்பதில் மட்டுமே பயன் இல்லை; முறையான விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்” எனதெரிவித்தார்.


மேலும், ஆரம்ப விசாரணைகளின் போது சந்தேகநபர் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்யப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போது விசாரணையில் தேக்கநிலை காணப்படுவதாகவும் நீதிமன்றம் கவனம் செலுத்தியது.


இஷாரா செவ்வந்தி தனது இரண்டாவது 90 நாள் தடுப்புக்காவல் காலத்தையும் கடந்துள்ள நிலையில், அவரைச் சார்ந்த முழுமையான விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது.இன்றைய விசாரணையின் போது சந்தேகநபர்கள் காணொளி தொடர்பு முறையின் மூலம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

27 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

68 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

58 0 0