உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, பொலிஸாருடன் இணைந்து நேற்று திங்கட்கிழமை(30) இரவு பிடித்துள்ளனர்.

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பொதுப் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விடப்பட்ட கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் பெறுமதியான பயிர் வகைகளும் சேதப்படுத்தப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததை தொடர்ந்து கட்டாக்காலி மாடுகளை பிடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைவாக, பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நகர் பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையினால் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு பல தடவைகள் அறிவுறுத்தியும் கவனத்தில் கொள்ளாமையினால் இம் மாட்டு உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தி தங்களது மாடுகளை அழைத்துச் செல்லுமாறும் தவறும் பட்சத்தில் ஒரு நாளைக்கு பின் மாடுகளை பெற்றுக்கொள்ளாத உரிமையாளருக்கு பராமரிப்புச் செலவும் மேலதிகமாக அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 03 நாட்களுக்குள் மாடுகளை உரிமையாளர்கள் பெறாவிட்டால் பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

27 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

68 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

58 0 0