உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கொத்து, ரைஸ் ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
43 பார்வைகள்

நாட்டில் இன்று (31) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகிய உணவுகளின் விலைகள் 30 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதன் காரணமாகவே, இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது.

அந்தவகையில் அனைத்து உணவகங்களிலும் மின்சாரப் பயன்பாடு 180 அலகுகளைத் தாண்டும் எனவும், அத்தகைய சூழ்நிலையில் பாரிய மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பதனால், இத்தொழிற்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த விலை அதிகரிப்பு தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

2 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

68 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

58 0 0