உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அரச உத்தியோகத்தர்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

தம்புள்ளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவர், தமக்குக் கிடைத்த பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 2 இலட்சத்து 13 ஆயிரத்து 780 ரூபாய் பணத்தை பொலிஸாரின் உதவியுடன் அதன் உரியவரிடம் ஒப்படைத்து நேர்மைக்கான முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.


உத்தியோகத்தர் துஷார ஜயவர்தன, தம்புள்ளை நகரில் பொருட்கள் வாங்கிச் சென்ற பின்னர் வீட்டில் பார்த்தபோது அடையாளம் தெரியாத பையில் பெருமளவு பணம் இருப்பதை கவனித்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்து முறைப்பாடு செய்துள்ளார்.


பொலிஸாரின் விசாரணைகளின் மூலம், அந்தப் பணம் தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலின் பொருளாளருக்குச் சொந்தமானதுஎன கண்டறியப்பட்டது.புனித ரமழான் மாதத்திற்காக சேகரிக்கப்பட்ட நன்கொடையாக இருந்த அந்தத் தொகை, பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
இந்த நேர்மையான செயல் பொதுமக்களிடமும் பொலிஸாரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

40 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

43 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0