உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கமராவிற்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தல்; சந்தேகநபருக்கு தடுப்புக்காவல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

சிசிடிவி கமராவிற்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அக்கரைப்பற்று நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குத் தனியார் பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட 34 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 20 வயதுடைய சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை (26) அதிகாலை அக்கரைப்பற்றில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (26) ஆஜர்படுத்திய போது எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர் சிசிடிவி கமரா பொதிக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த நிலையில் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைதானார்.

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் இனந்தெரியாத நபரொருவரால் பொதியொன்று கையளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொதியில் தொலைபேசி இலக்கமொன்று குறிப்பிடப்பட்டிருந்ததுடன் அக்கரைப்பற்றில் உள்ள நபரொருவர் இதனைப் பெற்றுக்கொள்வார் எனப் பேருந்து நடத்துனரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடத்தல் குறித்து கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பகீரதன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த இடத்திற்கு பொதியை பெற்றுக்கொள்ள வருகை தந்த சந்தேக நபர் கைதானார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்ட சிசிடிவி கமராவினை சோதனையிட்டபோது அதன் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

78 0 0
அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

83 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

130 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

96 0 0