நைஜீரிய ஜனாதிபதி 37 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்தானியாவில் அரசமுறைப் பயணம் தொடங்கி வைத்தார்.!
பிரித்தானியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரிய ஜனாதிபதி போலா அகமது டினுபு (Bola Ahmed Tinubu) லண்டனில் தனது அரசமுறைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
நைஜீரிய ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி ஒலுரேமி டினுபு (Oluremi Tinubu) ஆகியோரை விண்ட்சர் கோட்டைவில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா நேரில் வரவேற்றனர்.
இந்த இரண்டு நாள் பயணத்தின் முக்கிய நோக்கம், வர்த்தகம், நிதிச் சேவை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் புதிய பொருளாதார கூட்டாண்மையை உருவாக்குவது என குறிப்பிடப்பட்டுள்ளது. ரமலான் நோன்பு நோற்றுள்ளதால், வழக்கமாக மன்னர் அளிக்கும் மதிய விருந்தை தவிர்த்து, இரவு நேர அரச விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு இணைந்து, ஜனாதிபதி டினுபு நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் நிகழ்ந்த தற்கொலை குண்டுத்தாக்குதல்களை கண்டித்தும், மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் குறிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும், பிரித்தானியாவின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் கல்லறையில் ஜனாதிபதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.