அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் நியமனம்.!
முன்னாள் மல்யுத்த வீரரும், பாராளுமன்ற உறுப்பினருமான மார்க்வேன் முல்லினை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக ஜனாதிபதி டிரம்ப்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.
13 ஆண்டுகள் பாராளுமன்ற அனுபவம் கொண்ட இவர், டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் ஆவார். புதிதாக பொறுப்பேற்கும் மார்க்வேனுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.குறிப்பாக, சட்டவிரோத குடியேறிகளை ஒட்டுமொத்தமாக திரட்டி நாடுகடத்தும் டிரம்ப்பின் ‘மெகா’ திட்டத்தை இவர் செயல்படுத்த வேண்டும்.
மேலும், நிதி நெருக்கடியால் சம்பளம் இன்றி தவிக்கும் பாதுகாப்பு படை வீரர்களின் பிரச்சினை மற்றும் முடங்கிக் கிடக்கும் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி பேரிடர் மீட்பு நிதியை விடுவிப்பது போன்ற இக்கட்டான பணிகளை இவர் கவனிக்க வேண்டியுள்ளது.
மல்யுத்த களத்தில் எதிரிகளை வீழ்த்திய முல்லின், இப்போது அமெரிக்காவின் பாதுகாப்பு சவால்களை எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை உலகமே உற்று நோக்குகின்றது.