உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று ஜெனீவாவில் ஊடகவியலாளர்களிடம் உலக உணவுத் திட்டத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் கார்ல் ஸ்காவ் இதனை தெரிவித்துள்ளார்.கடந்த பெப்ரவரி இறுதியில் போர் ஆரம்பமானது முதல், மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் மாற்றப்பட்டதன் காரணமாக, உலக உணவுத் திட்டத்தின் போக்குவரத்துச் செலவுகள் 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.

மேலும், மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் முக்கிய கடல்வழிப் பாதைகள் தடைசெய்யப்பட்டுள்ளதால், உலகின் பல பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு உணவு வழங்கும் பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனுடன், சர்வதேச நன்கொடையாளர்கள் தமது நிதியை போர் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு மாற்றியமைத்துள்ளதால், பட்டினி ஒழிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


தற்போது உலகளவில் சுமார் 31.9 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போர் ஜூன் மாதம் வரை நீடித்தால் இந்த எண்ணிக்கை 36.4 கோடியாக அதிகரிக்கக்கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலை தொடர்ந்தால், மனித வரலாற்றிலேயே மிக மோசமானபட்டினிச் சூழல் உருவாகும் அபாயம் இருப்பதாக கார்ல் ஸ்காவ் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0