உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரான்ஸை உலுக்கும் தேர்தல் முடிவுகள்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
45 பார்வைகள்

இல்-து-பிரான்ஸ் பகுதியில் அமைந்துள்ள செயின்-டெனிஸ் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில், பாலி பகயோகோ தலைமையிலான எல்.எஃப்.ஐ–கம்யூனிஸ்ட் கூட்டணி முதல் சுற்றிலேயே 50.77 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய மேயராக இருந்த மாத்யூ ஹனோத்தான் 33 சதவீத வாக்குகளுடன் தோல்வியடைந்தார்.


இந்த வெற்றியின் மூலம், எல்.எஃப்.ஐ கட்சி இல்-து-பிரான்ஸ் பகுதியில் தனது மிகப்பெரிய நகராட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. சுமார் 1.5 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட செயின்-டெனிஸ் நகரம் வரலாற்றில் கம்யூனிஸ்ட் ஆதிக்கம் கொண்டதாக இருந்த போதிலும், 2020 ஆம் ஆண்டிலிருந்து சோசலிஸ்ட் கட்சியால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

2025 ஆம் ஆண்டு பியர்ஃபிட்-சூர்-சேன் நகருடன் இணைக்கப்பட்டதன் பின்னர், இது பரிசுக்குப் பிறகு பெரிய நகரமாக உருவெடுத்துள்ளது. இந்தஇணைப்பை மீண்டும் பரிசீலிக்க மக்களின் கருத்தை கேட்க உள்ளதாக பாலி பகயோகோ தெரிவித்துள்ளார்.
53 வயதுடைய பாலி பகயோகோ, பொதுப் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவமுடையவர்.

தனது தேர்தல் அறிக்கையில் வீட்டு வாடகை கட்டுப்பாடு, மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குதல், கல்வி உதவித்தொகைகள் வழங்குதல் போன்ற நலத்திட்டங்களை முன்வைத்துள்ளார். மேலும், நகராட்சி காவல்துறையை மக்களுடன் நெருக்கமாக செயல்படும் முறையாக மாற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.


இந்தத் தேர்தல் கடும் பதற்ற சூழலில் நடைபெற்றது. இரு தரப்பினரும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், வாக்குப்பதிவு நாளிலும் தேர்தல் முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல சர்ச்சைகள் மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகள் நிலவிய நிலையில், வாக்காளர் பங்கேற்பு குறைந்து, 57.16 சதவீதம் பேர் வாக்களிக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0