உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கியூபெக் வரவு–செலவுத் திட்டம்: மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிப்பு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

கனடாவின் கியூபெக் மாநில நிதியமைச்சர் எரிக் ஜிரார்ட் நாளை தனது எட்டாவது வரவு–செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அது தொடர்பான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.வரவிருக்கும் தேர்தல் சூழ்நிலையிலும், இந்தத் திட்டம் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளைக் கொண்டதாக இருக்காது என்றும், மிதமானதும் இலக்கு மையப்படுத்தப்பட்டதுமான திட்டமாக அமையும் என்றும் அவர் முன்கூட்டியே தெரிவித்துள்ளார்.


கடந்த நவம்பர் மாத மதிப்பீட்டின் படி, கியூபெக் மாநிலம் 12.4 பில்லியன் தொகை நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.9 சதவீதமாகும். இந்த பற்றாக்குறையை 2029–30 நிதியாண்டுக்குள் முழுமையாக நீக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதுடன், அதற்கான நடைமுறைகள் குறித்து இன்னும் முழுமையான தெளிவு இல்லை என தணிக்கையாளர் தரப்பு கவலைவெளியிட்டுள்ளது.


மேலும், 2026 ஆம் ஆண்டு கியூபெக் மற்றும் கனடா முழுவதும் பொருளாதார ரீதியில் சவாலானதாக இருக்கும் என நிதியமைச்சர் எச்சரித்துள்ளார். வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகும் சாத்தியம் இருந்தால், அது பரந்த பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், உலகளாவிய போர்ச் சூழ்நிலைகளும் பொருளாதாரத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனினும், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படும் எனவும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான முதலீடுகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0