உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நெதன்யாகு மரணம் வதந்திக்கு முற்றுப்புள்ளி – வீடியோ மூலம் நவ்ரூஸ் வாழ்த்து .!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணம் குறித்த வதந்திகள் பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வீடியோ வெளியிட்டு ஈரான் மக்களுக்கு பெஞ்சமின் நெதன்யாகு நவ்ரூஸ் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டு விட்டார் என்று வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. எனினும் அவர் உயிருடன் தான் இருக்கிறார், நலமாக உள்ளார் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தொடர்ந்து கூறி வருகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், பெஞ்சமின் நெதன்யாகு கையில் தேனீர் அருந்தியபடியே பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது. அது செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட வீடியோ என்று தகவல் பரவியதால் மரணம் குறித்த வதந்திகள் தொடர்ந்தன.

இந்நிலையில் இன்று இன்னொரு வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் பிரதமர் ஈரான் மக்களுக்கு நவ்ரூஸ் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். நவ்ரூஸ் என்பது வசந்த காலத்தின் வருகையையும், புத்தாண்டு தொடக்கத்தையும் குறிக்கும் 3,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பண்டிகையாகும்.

“ஈரானின் துணிச்சலான மக்களே, ஒவ்வொரு ஆண்டும் நான் வாழ்த்துவது போலவே, ‘ஒளித் திருவிழா’வுடன் தொடங்கும் இந்தத் திருவிழாக் காலம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இருளை வென்று ஒளி வெற்றிபெறும். தீமையை வென்று நன்மை வெற்றிபெறும். ஈரான் மக்களின் தொன்மையான நம்பிக்கையையே இது உணர்த்துகின்றது. ஈரான் மக்கள் அனைவருக்கும் நவ்ரூஸ் பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டு இந்த விடுமுறை சிறப்பாக அமையட்டும்.

உங்கள் நண்பர்கள், உங்கள் குடும்பத்தினர், உங்கள் அன்புக்குரியவர்களுடன் கொண்டாடுங்கள். உங்கள் அனைவருக்கும் புதிய தொடக்கமாக அமையட்டும்” என பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0