உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிஸார்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

சீனாவின் மகாவ் நகரில் 70 வயதுடைய பெண்மணியை பயமுறுத்தியதாகக் கூறப்படும் மனித வடிவ ரோபோவை பொலிஸார் “கைது” செய்த வினோத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.வீதியில் நடந்து கொண்டிருந்த போது கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்மணி, தன்னுக்குப் பின்னால் ரோபோ வந்ததை கவனிக்காமல் இருந்துள்ளார். திடீரென அருகில் நின்றிருந்த ரோபோவை கண்டதும் அவர் அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த ரோபோ, அப்பகுதியில் செயல்படும் ஒரு கல்வி மையத்திற்கு சொந்தமானது. சம்பவத்திற்குப் பின்னர், ரோபோ அதன் உரிமையாளரான 50 வயதுடைய நபரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.இச்சம்பவத்தையடுத்து, பொதுமக்கள் அதிகமாகச் செல்லும் இடங்களில் ரோபோக்களை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


சம்பவத்தை நேரில் கண்டவர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்மணி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றார். எனினும், எந்தவித புகாரும் அளிக்க விருப்பமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி, “ரோபோ கைது” என நகைச்சுவையாக பகிரப்பட்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0