உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நெதன்யாகுவுக்கு எதிராக ஈரான் எச்சரிக்கை; வைரலான வீடியோ குறித்து சந்தேகம்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
66 பார்வைகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“குழந்தைகளை கொல்லும் இந்தக் குற்றவாளி நெதன்யாகு உயிருடன் இருந்தால், எங்களது முழு பலத்தையும் பயன்படுத்தி அவரைத் தொடர்ந்து தேடி சென்று கொல்வோம்” என ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் மார்ச் 12ஆம் திகதி வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில் நெதன்யாகுவின் ஒரு கையில் ஆறு விரல்கள் இருப்பது போலத் தோன்றுவதாக சில இணையப் பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால், அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் திருத்தப்பட்ட காணொளியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


அந்தக் காணொளியில் 76வயதான நெதன்யாகு, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பின்னர் நடைபெற்ற தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. அதில், ஈரானின் புதிய உயர் தலைவர் மோஜ்தபா கொமெய்னியை கொல்லப்போவதாக மறைமுகமாக எச்சரித்ததுடன், இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளையும் அவர் நியாயப்படுத்தியிருந்தார்.

இதற்கிடையில் அமெரிக்க அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ் உள்ளிட்ட சிலர் “பிபி எங்கே?” என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.ஆனால், பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்ததாக பரவி வரும் தகவல்களை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. அவர் நலமாக உள்ளார் எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

93 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0