இந்தியாவிடமிருந்து 45 ஆயிரம் தொன் டீசல் இறக்குமதி செய்ய பங்களாதேஷ் தீர்மானம்.!
இந்தியாவிடமிருந்து 45 ஆயிரம் தொன் டீசல் இறக்குமதி செய்ய பங்களாதேஷ் தீர்மானித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமை காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு, டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதன்படி. இந்தியாவிடமிருந்து கூடுதலாக 45 ஆயிரம் தொன் டீசல் இறக்குமதி செய்ய பங்களாதேஷ் முடிவு செய்துள்ளது. அதனை செயல்படுத்துவதற்கான பணிகள் நிறைவடைந்ததும் ஏப்ரலுக்குள் டீசல் எங்கள் நாட்டை வந்தடையும் என்று பங்களாதேஷின் பெற்றோலியக் கூட்டுத்தாபன பொது மேலாளர் முகமது முர்ஷித் உசைன் ஆசாத் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில் 5 ஆயிரம் தொன் டீசல் இந்தியாவிடமிருந்து வந்து சேர்ந்தது, அடுத்து மார்ச் 18 அல்லது 19ஆம் திகதியில் மேலும் 5ஆயிரம் தொன் டீசல் வந்து சேரும் எனக் கூறியுள்ளார்.