உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உயிரிழந்த 84 ஈரானியர்களின் இறுதி ஊர்வலம் நாளை மறுதினம்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
57 பார்வைகள்

உயிரிழந்த 84 ஈரானியர்களின் இறுதி ஊர்வலம் நாளை மறுதினம் (18) நடைபெறும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இம் மாதம் 04ஆம் திகதி அமெரிக்காவினால் டெனா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கப்பலில் இருந்த 84 ஈரானியர்கள் உயிரிழந்தனர்.

குறித்த கப்பலானது காலி கடற்பரப்புக்கு அருகில் விபத்துக்குள்ளானதால் உயிரிழந்த ஈரானியர்களின் உடல்கள் காலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஈரானியர்களின் உடல்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டன.

அதன்படி, நாளை (17) மாலை தலைநகரின் முக்கிய சதுக்கங்களில் உயிரிழந்தவர்களின் விடைபெறும் நிகழ்வுகள் நடைபெறுவதொடு, இறுதி ஊர்வலம் நாளை மறுதினம் (18) தெஹ்ரானில் நடைபெறும் எனவும் அந்நாட்டு நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

93 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0