ஹோர்முஸ் நீரிணைக்கு கடற்படை கப்பலை அனுப்ப மாட்டோம் – அவுஸ்திரேலியா தெரிவிப்பு.!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக நட்பு நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, இப்போதைக்கு ஹோர்முஸ் நீரிணை பிராந்தியத்திற்கு கடற்படை கப்பலை அனுப்பத் திட்டமில்லை என தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், அவுஸ்திரேலியா நேரடி இராணுவ தலையீட்டில் ஈடுபடாது என்ற தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.