உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈராக் – லெபனான் எல்லையில் தாக்குதல்: பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
55 பார்வைகள்

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக ஈராக் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.இந்தத் தாக்குதலில் ஐந்து ஏவுகணைகள் குறித்த பகுதியில் விழுந்து வெடித்ததாகவும், அதன் விளைவாக விமான நிலையப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தாக்குதல்களை ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமும் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை, லெபனானின் தய்பே நகருக்கருகில் இஸ்ரேலியப் படையினரை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.


அத்துடன், இஸ்ரேல் – லெபனான்எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிரியாத் ஷ்மோனா மற்றும் அவிவிம் நகரங்களையும் நோக்கி ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தொடர்ச்சியான தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

93 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0