உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் தாக்குதல்கள் தொடரும் என ட்ரம்ப் எச்சரிக்கை.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

ஈரான் அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு விருப்பம் தெரிவித்திருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததாவது, தற்போதைய நிபந்தனைகள் திருப்திகரமாக இல்லாததால் இப்போதைக்கு அமைதி ஒப்பந்தம் செய்யப்படவிருப்பதில்லை.


ட்ரம்ப், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை குறித்தும், “நாங்கள் அத்தீவை முற்றாக அழித்துவிட்டோம். இன்னும் சில தடவைகள் தாக்குதல் நடக்கும்” என கூறியுள்ளார். மேலும், ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை உற்பத்தித் தளங்கள் இரண்டு நாள்களுக்குள் முழுமையாகத் துடைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிருடன் இருக்கிறாரா என்பது தொடர்பில் சந்தேகம் உள்ளதாகவும், தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் உலக சந்தையில்மசகு எண்ணெய் விலை அதிகரிப்பைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என்றும், ஹோமுஸ் நீரிணையை பாதுகாக்க சீனா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி செய்துள்ளார்.


தற்போது அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கலன் 3.66 டொலராக உயர்ந்துள்ளதையடுத்து, போரின் முடிவின் பின்னர் அது முன்னைய நிலைக்கு மீண்டும் குறையும் என ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.இதேபோல், உக்ரேன் போரின் தொடர்பிலும், ரஷ்யா மீதான தடைகளை தற்காலிகமாக நீக்குவதை நியாயப்படுத்தியுள்ளார்.

மேலும், உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வழங்கிய உதவியை நிராகரித்து, “எமக்கு ஜெலென்ஸ்கியின் உதவி தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.ட்ரம்ப், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் தேவையற்ற முறையில் ஈரானால் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட போதிலும், அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

93 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0