வங்கி கட்டமைப்புகள் தாக்கப்பட்டால் பதிலடி தீவிரம்: ஈரான் எச்சரிக்கை.!
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை தொடர்ந்து இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வங்கி கிளைகள் மீதான தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்தப்படும் என ஈரான் புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.
கடந்த வாரம் ஈரானிய வங்கி கட்டிடங்களுக்கு அருகில் நடைபெற்ற தாக்குதல்களின் காரணமாக நாட்டின் வங்கி சேவைகள் சில காலம் ஸ்தம்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு பதிலடியாக வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க வங்கி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல்கள் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் எதிரித் தரப்பினர் மீண்டும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால் வளைகுடா நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க வங்கி கிளைகளும் ஈரானின் சட்டபூர்வமான இலக்குகளாக மாறும் எனவும்அந்தப் படை தெரிவித்துள்ளது.
அண்மையில் ஈரானின் பழமையான மற்றும் பெரிய வங்கிகளில் ஒன்றான செபா வங்கி கட்டிடமும் மற்றொரு வங்கி கட்டிடமும் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல ஊழியர்கள் உயிரிழந்ததுடன், வங்கி சேவைகள் பல மணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.