உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் போர் நீடித்தால் எண்ணெய் விலை 150 டொலர் வரை உயரும் அபாயம்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் இன்னும் சில வாரங்கள் தொடர்ந்தால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஈடு செய்ய முடியாத அளவிற்கு உயரக்கூடும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் சுமார் 100 டொலராக விற்பனை செய்யப்படும் நிலையில், போர் நீடித்தால் அது 120 டொலர் முதல் 150 டொலர் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.


போர் உடனடியாக நிறுத்தப்பட்டாலும் சந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகும் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஈரான் போர்நிறுத்தத்தை அறிவித்து கப்பல்களைத் தாக்குவதை நிறுத்தினாலும், சந்தை முழுமையாக நிலைநிறுத்தப்படுவது எளிதானதாக இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் எரிபொருளை வாங்க முடியாத நிலை உருவாகி, சந்தையில் அதன் தேவை தானாகவே குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வளர்ச்சி மந்தமடையும் அபாயமும் உள்ளது.


இதற்கிடையில் எண்ணெயை விட இயற்கை எரிவாயு சந்தை மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கட்டார் நாடு தனது உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், உலகின் சுமார் 20 சதவீத திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலைக்கு குறுகிய காலத்தில் மாற்று தீர்வுகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும் சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0