ஈரான் டிரோன் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு.!
அமெரிக்காவின் சேஃப்சீ டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சேஃப்சீ விஷ்ணு எண்ணெய் கப்பல், இராக்கின் பஸ்ரா துறைமுகம் அருகே சென்ற போது ஈரான் ராணுவத்தால் திடீர் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் ஒரு இந்திய ஊழியர் உயிரிழந்தார்; கப்பலில் இருந்த மற்ற 15 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
மேலும், பாரசீக வளைகுடாவில் இராக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கிரீஸ் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மால்டா கொடியுடன் வந்த மற்றொரு எண்ணெய் கப்பல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இரண்டாவது தாக்குதலுக்கும் ஈரான் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நீருக்கடியில் செல்லும் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.