உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடுமையான தாக்குதல்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
52 பார்வைகள்

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் செவ்வாய்க்கிழமை (10) ஈரானை இலக்காகக் கொண்டு கடுமையான வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இந்த நாள் போரில் மிகவும் தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்ற நாளாக இருந்ததாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனும் தரையில் இருந்த ஈரானிய தரப்பும் தெரிவித்துள்ளன.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்தால், வளைகுடா பிராந்தியத்திலிருந்து எண்ணெய் ஏற்றுமதியைத் தடுப்போம் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது. இதனிடையே, கட்டாரில் உள்ள அல் உதெய்த் அமெரிக்க இராணுவத் தளம் மற்றும் ஈராக் குர்திஸ்தானில் உள்ள அல் ஹரிர் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமானத் தளமும் பஹ்ரைனில் உள்ள ஜுஃபைர் கடற்படைத் தளமும் ட்ரோன் தாக்குதல்களுக்கு இலக்காகியதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.இதனுடன், புதன்கிழமை (11) அதிகாலையில் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை மத்திய இஸ்ரேல் பகுதிகள்மீதும் ஈரானிய ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்புகள் பல ஏவுகணைகளை இடைமறித்து பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததையடுத்து இஸ்ரேலிய மக்கள் பாதுகாப்பு தங்குமிடங்களுக்கு விரைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது

.
ஹார்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகத்தைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த எச்சரிக்கையை வெள்ளை மாளிகை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், அந்தப் பகுதியூடாகச் செல்லும் அமெரிக்க கடற்படை கப்பல்களுக்குபாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மோதலால் உலகளாவிய எரிசக்தி சந்தைகளிலும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக திங்களன்று மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 120 அமெரிக்க டொலராக உயர்ந்தது. எனினும் செவ்வாய்க்கிழமை பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 90 அமெரிக்க டொலருக்கு கீழ் சரிந்தது. அதேசமயம் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் முந்தைய சரிவிலிருந்து ஓரளவு மீட்சியடைந்துள்ளன.


இந்நிலையில், அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதல்களின் நோக்கங்கள் நிறைவேறியதும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் குறையும் என வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
போரின் விளைவாக மனித இழப்புகளும் அதிகரித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து 1,300-க்கும் மேற்பட்ட ஈரானிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஈரானின் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான தூதர் அமீர் சயீத் இராவானி தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 8,000 வீடுகள், 1,600 வணிக மற்றும் சேவை மையங்கள், பல மருத்துவ, கல்வி மற்றும் எரிசக்தி வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே, மோதலின் தொடக்கத்தில் உயிரிழந்த ஆறு அமெரிக்க வீரர்களைத் தொடர்ந்து தற்போது வரை சுமார் 140 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக பென்டகன் மதிப்பிட்டுள்ளது. இதில் எட்டு வீரர்கள் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0