உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நிக்கோலா சர்கோசி வழக்கில் புதிய திருப்பம்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
40 பார்வைகள்

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி, பிஸ்முத் மற்றும் பைக்மாலியோன் வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனைகளை ஒன்றிணைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். பிஸ்முத் வழக்கில் தாம் மின்னணு கண்காணிப்பு வளையம் அணிந்து தண்டனையை அனுபவித்த காலத்தை, பைக்மாலியோன் வழக்கின் தண்டனையாகக் கருத வேண்டும் என்றும் அவர் வாதிட்டிருந்தார்.


எனினும், பாரிஸ் குற்றவியல் நீதிமன்றம் கடந்த 9ஆம் திகதி இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதன் காரணமாக பைக்மாலியோன் வழக்கில் வழங்கப்பட்ட ஆறு மாத கட்டாய சிறைத் தண்டனையை அவர் தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனை மின்னணு கண்காணிப்பு வளையம் அணியும் முறையில் நிறைவேற்றப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பைக்மாலியோன் வழக்கில், 2012ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக சட்டவிரோதமாக நிதி பயன்படுத்தியதாக சர்கோசி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இதற்காக 2024ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியதுடன், அதில் ஆறு மாதங்கள் கட்டாய தண்டனையாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2025ஆம் ஆண்டு அந்தத் தீர்ப்பு இறுதியாக உறுதி செய்யப்பட்டது.
அதேவேளை, பிஸ்முத் வழக்கில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குற்றச்சாட்டுகளுக்காக சர்கோசி மூன்று ஆண்டு சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதில் ஒரு ஆண்டு கட்டாய தண்டனையாகும். அந்தத் தண்டனையின் ஒரு பகுதியாக அவர் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரை மின்னணு கண்காணிப்பு வளையம் அணிந்து தண்டனையை அனுபவித்தார்.இந்நிலையில், 2007ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக லிபியாவிலிருந்து நிதி பெற்றதாகக் கூறப்படும் மற்றொரு வழக்கிலும் சர்கோசி மீண்டும் நீதிமன்றில் ஆஜராக உள்ளார். அந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை மார்ச் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0