உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்: ஈரானிய போர் விமானங்கள் 2 வீழ்த்தப்பட்டதாக கத்தார் அறிவிப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டுள்ள தாக்குதல்களின் பின்னணியில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரானைச் சேர்ந்த இரண்டு Sukhoi Su-24 போர் விமானங்களை தமது படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.


அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், கத்தார் அமீரி விமானப்படை ஈரானிலிருந்து அணுகிய இரண்டு போர் விமானங்களை தடுத்து வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. அதேவேளை, கத்தாரை நோக்கி ஏவப்பட்ட ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஐந்து ட்ரோன்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.அனைத்து அச்சுறுத்தல்களும் அவற்றின் குறிக்கோள் இடங்களை அடைவதற்கு முன்னரே தடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.


அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானின் மூத்த தலைவர்கள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படும்நிலையில், அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ வசதிகளுக்கான முக்கிய தளமாக விளங்கும் கத்தார், தமது நிலப்பரப்பில் நடைபெறும் எந்தவித தாக்குதல்களையும் கண்டிப்பதாகவும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் உரிமையை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பாளர்கள் மற்றும் பயணிகள் அமைதியாக இருந்து அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

92 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0