உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
36 பார்வைகள்

அயதுல்லா அலி கொமேனி படுகொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. இதன் பின்னணியில், சர்வதேச வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் ஈரானிய ஆயுதப்படைகளின் இலக்காகக் கருதப்படும் என்றும், அவற்றுக்கு எதிராக கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமது உச்சத் தலைவரின் படுகொலைக்கு பதிலடியாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் இலக்குகளை நோக்கி தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணை முக்கியப் பாதையாக இருப்பதால், அதன் மூடல் சர்வதேச சந்தைகளில் கடுமையான பொருளாதார அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.“எமது இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலுக்குப் பதிலடியாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என ஈரான் ஆயுதப்படைகள் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஈரான் மற்றும் அதனுடன் இணைந்த நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், பிராந்தியத்தில் முழுமையான போர் சூழல் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் சர்வதேச கவனம் திரும்பியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

92 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0