உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உபாதையால் நீக்கப்பட்ட மதீஷவுக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க இணைப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
48 பார்வைகள்

டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் மூன்றாவது மாற்றமாக, உபாதைக்கு உள்ளான மதீஷ பதிரணவுக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான குழுநிலைப் போட்டியின்போதே பதிரணவின் கெண்டைக்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவர் உடல் தகுதி பெற பல வாரங்கள் தேவை என்பதால், அவர் டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து நீக்கப்பட்டார்.


25 வயதான மதுஷங்க இதுவரை இலங்கை சார்பில் 15 டி20 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் அண்மைக் காலத்தில் உபாதை காரணமாக அவர் தொடர்ச்சியாக அணியில் இடம் பெற முடியவில்லை. முன்பே, டி20 உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் முன்னரே வேகப்பந்து வீச்சாளர் எஷான் மாலிங்கும் உபாதையால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்; அவருக்கு பதிலாக பிரமோத் மதுஷான் இணைக்கப்பட்டார். தொடர்ந்தும், காயத்துக்கு உள்ளானவனிந்து ஹசரங்கவுக்கு பதிலாக துஷான் ஹேமந்த் அழைக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

72 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0