உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஆடை உந்துருளியின் சக்கரத்தில் சிக்கி பல்கலைக்கழக மாணவி உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 45 நிமிடங்கள் முன்
62 பார்வைகள்

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் 26 வயதுடைய திருமணமான மாணவி உயிரிழந்துள்ளார்.

நிந்தவூர் 9 ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

தனது தந்தையுடன் உந்துருளியில் சென்று, பல்கலைக்கழக இறுதி ஆண்டுக்கான பாடச் சமர்ப்பிப்பை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இச் சோக விபத்து நேர்ந்துள்ளது.

உந்துருளியின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த மாணவியின் ஆடை பின் சக்கரத்தில் எதிர்பாராதவிதமாகச் சிக்குண்டதால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாகக் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவிக்குத் திருமணமாகி 2 ஆண்டுகளான, அவரது கணவர் வெளிநாடொன்றில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பாக நிந்தவூர் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நூர்டீன் சர்ஜூனின் உத்தரவிற்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.

பிரேத பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக உண்டான தீவிர இரத்தப்போக்கே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வேலையற்ற பட்டதாரிகளுக்காக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் யாவை?

“போட்டிப் பரீட்சை இன்றி சேர்த்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இனிவரும் காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்களா? இன்று வரை அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும்…

81 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் கீரி கடற்கரையில் நடைபெறவுள்ள உலக சுற்றுலா தினம்; முன்னாயத்த பணிகள் தீவிரம்.!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மன்னார் கீரி கடற்கரையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு…

61 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து நீதி அமைச்சருடன் சுவிஸ் பதில் தூதுவர் பேச்சு.!

நீண்டகாலமாகப் பதில்களுக்காகக் காத்திருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கான நகர்வுகள் தொடர்பிலும்…

81 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு; குற்றவாளிகள் கடுங்காவல் சிறையில் அடைப்பு.!

ஈஸ்டர் படுகொலை வழக்கு தொடர்பான முக்கிய தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதிகாலை 2.00…

23 0 0