உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை – பத்து நாட்கள் அவகாசம்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
49 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தில் இணைவதற்கு வலியுறுத்தி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகரில் நடைபெற்ற அமைதிப் பேரவையின் தொடக்கக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஈரான் புதிய ஒப்பந்தத்திற்கு இணங்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்த அவர், இதற்காக 10 முதல் 15 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அடுத்த பத்து நாட்களில் இதுகுறித்து பல தகவல்கள் வெளியாகும் என்றும், வழங்கப்பட்ட காலம் போதுமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், ஈரான் தரப்பும் கடுமையான பதிலடி எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் குறிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு ஈரான்கடிதம் அனுப்பி, தாம் தன்னிச்சையாகப் போரைத் தொடங்கமாட்டோம் எனவும், ஆனால் இராணுவ ஆக்கிரமிப்பு அல்லது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் தற்காப்பு உரிமையின் அடிப்படையில் பதிலடி வழங்கும் உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

72 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0