உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் விவகாரம் தீவிரம்: பிரித்தானியத் தளங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
59 பார்வைகள்

ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய அரசின் சாகோஸ் தீவுகள் தொடர்பான ஒப்பந்தத்தை முடக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.சர்வதேசச் சட்டம் மீறப்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, டியாகோ கார்சியா தீவு அல்லது குளோசெஸ்டர்ஷையர் மாகாணத்தில் அமைந்துள்ள அரச வான்படைத் தளத்திலிருந்து எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமெரிக்க ஜனாதிபதியை எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டார்மரின் இந்த முடிவு, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சாகோஸ் தீவுகளை மொரீஷியஸ் நாட்டிடம் ஒப்படைக்கும் திட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.முன்னதாக, ஈரான் கடற்பரப்பிற்கு அருகில் பெரும் போர்க்கப்பலை நிலைநிறுத்திய ட்ரம்ப், அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமைதி ஒப்பந்தத்தை பத்து நாட்களுக்குள் எட்ட வேண்டும் என ஈரான் அரசை எச்சரித்திருந்தார். இல்லையெனில் கடுமையான விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


புதன்கிழமை இரவு சமூக வலைத்தளங்களில் தனது கருத்தை வெளியிட்ட ட்ரம்ப், முக்கியமான இந்தத் தீவின் கட்டுப்பாட்டை இழப்பது பெரிய தவறாகும் என பிரித்தானிய அரசை எச்சரித்துள்ளார்.மேலும், ஈரான் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால், டியாகோ கார்சியா உள்ளிட்ட தளங்களிலிருந்து தாக்குதல் நடத்த வேண்டிய நிலை உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், ஈரான் மீது அமெரிக்கா மேற்கொள்ளக்கூடிய இராணுவ நடவடிக்கைகள், பிரித்தானியா உட்பட பல நாடுகளை பாதுகாப்பதற்காகவே என ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

72 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0