உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் பத்து பேரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 10 தமிழக மீனவர்களை எதிர்வரும் மார்ச் 05, 2026 வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் இரு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இலங்கை கடற்பரப்பை மீறி நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


கடல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை அதிகாரிகள், 10 பேரையும் கைது செய்ததுடன், அவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் கைப்பற்றி தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், மீனவர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அங்கு நடைபெற்ற மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர், அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.வழக்கை பரிசீலித்த மன்னார் நீதவான், குறித்த 10 மீனவர்களையும் மார்ச் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

53 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

56 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

50 0 0