உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இந்தியா– இலங்கை உறவில் புதிய இராஜதந்திர அத்தியாயம்: மோடி – அநுர விசேட சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு புதுடில்லியில் நடைபெற்றது.புதுடில்லியில் அமைந்துள்ள பாரத் மண்டபம் மண்டபத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய இணக்கப்பாடு குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.


சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய விசேட இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டார்.இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, புதுடில்லியில் நடைபெற்று வரும் AI Impact Summit 2026 சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா பயணமானார்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் இன்றைய அமர்வில் கலந்துகொண்ட அவர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மனித குல நலனுக்காகவும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.
மேலும், சர்வதேச தொழில்நுட்ப ஆளுமை மற்றும் அதன் சவால்களை எதிர்கொள்வது தொடர்பாகவும் முக்கிய கருத்துகளை முன்வைத்தார்.

உலக நாடுகளின் அரசத் தலைவர்கள் மற்றும் சர்வதேச தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில், சுமார் 20 நாடுகளின் தலைவர்களும், 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

2 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

53 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

56 0 0