உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கலிபோர்னிய பனிச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
69 பார்வைகள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த 15 பேர் கொண்ட குழு, லேக் தாஹோ அருகிலுள்ள சியரா நெவாடா பகுதியில் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர். கடந்த 17ம் திகதி, கேஸ்டில் பீக் பகுதியில் திடீரென வீசிய புயலால் பனிச்சரிவு ஏற்பட்டது.

இதனால் குழுவினரின் அனைவரும் சிக்கிக்கொண்டனர்.உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீட்புக் குழு, 6 பேரை உயிருடன் மீட்டது. ஆனால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காணாமல் போய், அவரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நெவாடா கவுண்டிமேயர் ஷானன் மூன் கூறுகையில், “1981ம் ஆண்டு மவுண்ட் ரெய்னியரில் 11 பேர் உயிரிழந்த பனிச்சரிவுக்கு பிறகு, அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவமாக இது அமைந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான பனிச்சரிவாக இது கருதப்படுகிறது” என்று தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

72 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0