உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சீன தொழிலதிபருடன் இரகசிய சந்திப்பு – பெரு ஜனாதிபதி பதவி நீக்கம்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
67 பார்வைகள்

சீன தொழிலதிபருடன் இரகசியமாக சந்தித்ததாக குற்றச்சாட்டுகளில், பெருவின் இடைக்கால ஜனாதிபதி ஜோஸ் ஜெரி பதவியேற்ற நான்கே மாதங்களில் பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஜெரி இரவு நேரத்தில் சீன தொழிலதிபர் ஜிஹுவா யாங்கை சந்தித்தது தொடர்பான விடியோ வெளியானது, இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

பெரு பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக 75 வாக்குகள், ஆதரவாக 24 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஜெரி பதவியை இழந்தார்.கடந்த ஒக்டோபரில், ஊழல் புகாரால் முன்னாள் ஜனாதிபதி தினா போலுவார்டே பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்றத் தலைவராக இருந்த ஜெரி இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.


வரும் ஏப்ரிலில் பெருவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது பாராளுமன்றத் தலைவர் ஃபெர்னாண்டோ ரோஸ்பிக்லியோசி இடைக்கால ஜனாதிபதி பதவியை ஏற்க மறுத்துள்ள நிலையில், பாராளுமன்றம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும், அவர் நாட்டின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவில் இது கடந்த எட்டு ஆண்டுகளில் நிகழ்ந்த எட்டாவது ஆட்சி மாற்றம். இதுபோதும் அரசியல் சீர்திருத்தம் இல்லாமையினாலும், நாட்டின் பொருளாதாரம் 3.4 சதவீத வளர்ச்சியில் நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

72 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0