உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த முன்னாள் கேப்டன்கள் !

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
62 பார்வைகள்

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் பாகிஸ்தான் அரசு வழங்க மறுக்கின்றது என அவரது குடும்பத்தினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குற்றம்சாட்டினர்.இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, இம்ரான் கானை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், அவருக்கு சிறையில் முறையான மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான வசதிகள் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்பட்டது.

இதில், சிறையிலுள்ள கடினமான சூழல்களாலும், போதிய மருத்துவ வசதிகள் வழங்கபடாததினாலும் இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இது சர்வதேச அளவில் மீண்டும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், இம்ரான் கானுக்கு சர்வதேச தரத்திலான மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி கபில் தேவ், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் இந்திய கேப்டன்கள் உள்பட சர்வதேச கிரிக்கெட் அணிகளின் 14-க்கும் அதிகமான முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர்.இதுபற்றி, அந்தக் கடிதத்தில் கூறப்பட்டதாவது:

“உலக கிரிக்கெட் வரலாற்றில் புகழ்பெற்ற ஜாம்பவானான இம்ரான் கானின் உடல்நிலைக் குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வருத்தமளிக்கின்றன. இம்ரான் கான் போன்ற ஒருநாட்டின் முன்னாள் தலைவர் மற்றும் உலக விளையாட்டு பிரபலம் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகின்றோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில், மைக்கேல் அதர்டன், எலன் போர்டர், மைக்கேல் பிரேர்லி, கிரெக் சேப்பல், இயன் சேப்பல், பெலிண்டா கிளார்க், டேவிட் கோவர், கிம் ஹியூஸ், நசர் ஹுசைன், கிளைவ் லொயிட், ஸ்டீவ் வாக் மற்றும் ஜோன் ரைட் போன்ற சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (பெப். 17) கூட்டாகக் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

72 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0