உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இனந்தெரியாத வன்முறைக் கும்பல் நடத்திய வாள்வெட்டில் இளைஞன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

மொனராகலை, படல்கும்புரை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கோரமான வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹயஸ் ரக வானொன்றில் வந்த இனந்தெரியாத வன்முறைக் கும்பலொன்றே இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை முன்னெடுத்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு படல்கும்புரை பிரதேசத்தில் நான்கு இளைஞர்கள் நின்றுகொண்டிருந்த வேளையில், அங்கு வந்த வன்முறைக் கும்பல் அவர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் படல்கும்புரை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஏனைய மூன்று இளைஞர்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலை நடத்திய பின்னர் வன்முறைக் கும்பல் வந்த வாகனத்திலேயே தப்பிச் சென்றுள்ளது.

தனிப்பட்ட பகையினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தேடுதல் வேட்டையையும் ஆரம்பித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

54 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

47 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

56 0 0