உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

இலங்கை செய்திகள் 36 நிமிடங்கள் முன்
55 பார்வைகள்

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று (24) தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“சபையின் 33 மில்லியன் ரூபாய் செலவில் விளையாட்டு அரங்கை அமைப்பதற்குப் பிரதேச சபை எடுத்துள்ள முயற்சி வரவேற்கத்தக்கது. இதேபோன்று ஏனையோரும் மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை, அந்த மக்களுக்குப் பாதிக்காத வகையில் உரிய முறையில் முன்னெடுக்க வேண்டும்.

இதேபோன்று மத்திய அரசும் யாழ். நகரில் விளையாட்டு அரங்கை அமைக்கப்போவதாக அறிவித்தது. ஆனால், இயற்கையையும் பாரம்பரிய அடையாளங்களையும் அழித்து மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அந்த இடம் அமைந்ததால் அதனை நாங்கள் எதிர்த்தோம்.

அதற்காக நாங்கள் மக்களின் அபிவிருத்தியை எதிர்க்கின்றோம் என்றும், நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் என்றும் எங்களுக்கு எதிராகத் திட்டமிட்ட பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்தனர். உண்மையில் நாங்கள் அபிவிருத்திக்குத் தடையில்லை. மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு இடம் என்பதனாலேயே அதனை நாங்கள் எதிர்த்தோம்.

அதனால் எங்கள் மீது பழியைப் போட்டு எங்களுக்கு எதிராகப் பொய்களைப் பரப்பினர். ஆனாலும், மக்கள் உண்மையை உணர்ந்துகொண்டதால் அந்தப் பொய்ப் பிரசாரங்களை நம்பவில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

41 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

53 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

45 0 0
இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0