உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு பலியாகும் தொழில் வல்லுநர்கள் – அரசின் பாதுகாப்புப் பொறுப்பை கேள்விக்குட்படுத்தும் வைத்தியர்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

கொழும்பில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவமானது, இந்த நாட்டில் பொதுமக்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு பாரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“பொதுமக்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எந்தவொரு அரசினதும் அடிப்படைப் பொறுப்பாகும். தத்தமது துறைகளில் ஈடுபடும் நிபுணர்கள், எவ்விதமான மிரட்டல்கள் அல்லது அச்சுறுத்தல்கள் இன்றி சுதந்திரமாகச் சேவையாற்றுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” – என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள், ஏனைய துறைசார் வல்லுநர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்புக்குள் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் தற்போது பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளன என்றும் கவலை வெளியிட்டுள்ளது.

குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, தொழில் வல்லுநர்கள் அச்சமின்றிப் பணியாற்றுவதற்கு ஏற்ற வலுவான மற்றும் நம்பகமான பாதுகாப்பு வழிமுறையொன்றை அரசு உடனடியாகச் செயற்படுத்த வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

54 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

47 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

56 0 0