உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் வீட்டில் நுட்பமான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனை செய்துவந்த ஒய்வுபெற்ற விவசாய திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் 26000ரூபா தண்டப்பணம் விதித்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மதுவரித்திணைக்களத்தின் மதுவரிப்பரிசோதகர் காண்டீபன் தலைமையிலான குழுவினர் நாவற்குடா,அம்பாள் வீதியில் தீடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.


இதன்போது வீடு ஒன்றில் கஸ் அடுப்பில் ஸ்ரீமர் வைக்கப்பட்டு நுட்பமானமுறையில் கசிப்பு உற்பத்திசெய்யப்பட்டு விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது.இந்த சுற்றிவளைப்பின்போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் 1600 மில்லிலீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் விவசாய திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்ற உத்தியோகத்தருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டது.இது தொடர்பில் குறித்த நபர் குற்றவாளியாக இனங்காணப்பட்டதனால் அவருக்கு 26000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

54 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

47 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

56 0 0