உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கை முஸ்லிம்களின் ரமழான் நோன்பு நாளை முதல் தொடக்கம் – கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் புனித ரமழான் நோன்பினை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1447ஆம் ஆண்டிற்கான ரமழான் மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று புதன்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க பிரதிநிதிகள், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் ஆகியோர் கலந்து, நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்த தலைப்பிறை தகவல்களை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்படி, இன்று இரவு முதல் பள்ளிவாசல்களில் விசேட ‘தராவிஹ்’ தொழுகைகள் ஆரம்பமாகும் என்றும், நாளை வியாழக்கிழமை புனித நோன்பு ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஈகைப் பண்பையும்இறைவனை வணங்குவதையும் வளர்க்கும் இந்த மாதத்தை இலங்கை முஸ்லிம்களும் பக்தி உணர்வுடன் வரவேற்கத் தயாராகி உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

54 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

47 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

56 0 0