உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சுவிஸ் தூதுக்குழுவிடம் நேரடி பார்வை மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகள் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புக்களை மறுசீரமைப்பதற்கு, மாகாண சபையின் வருடாந்த வரவு – செலவுத் திட்ட நிதிக்கு மேலதிகமாக, மத்திய அரசால் விசேட நிதி ஒதுக்கப்படவுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணைத் தூதுவர் ஒலிவியர் பிராஸ் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரை நேற்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பின்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டித்வா பேரிடரால் வடக்கில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆளுநர் விளக்கித் கூறினார். “பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புக்களைச் சீர்செய்வதற்கு நாம் கோரிய நிதியை விடுவிப்பதற்கு அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இது வழமையான மாகாண நிதி ஒதுக்கீட்டுக்குப் புறம்பான, மேலதிக ஒதுக்கீடாகும்” – என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றம் தற்போது வடக்கு மாகாணத்தில் ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்றும் ஆளுநர் கவலை வெளியிட்டார்.”வழமையான மழைகாலங்களை விடவும் ஏனைய மாதங்களிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகின்றது. இதனால், வடக்கு மாகாண விவசாயிகள் தமது பாரம்பரிய பயிர்ச்செய்கை நாட்காட்டியில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது” – என்றும் அவர் விளக்கினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த துணைத் தூதுவர், சுவிட்சர்லாந்திலும் காலநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளதாகவும் அதனை எதிர்கொள்ளும் வகையில் தமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள உள்கட்டமைப்பு முதலீடுகள் குறித்தும் ஆளுநருடன் பகிர்ந்துகொண்டார்.

வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களுக்குத் தான் நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்ட துணைத் தூதுவர், கடந்த காலங்களில் சுவிட்சர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட திட்டங்களையும், டித்வா பேரிடரால் மக்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களையும் கேட்டறிந்ததாகத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளமை மற்றும் கடந்த காலங்களில் காணப்பட்ட வீதியோரப் பாதுகாப்பு முகாம்கள் அகற்றப்பட்டுள்ளமை தொடர்பில் துணைத் தூதுவர் தனது சாதகமான கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், “உயர்பாதுகாப்பு வலயத்தினுள் நீண்டகாலமாக இருந்த வீதிகள் மக்கள் பாவனைக்குத் திறக்கப்பட்டு வருவதுடன், காணிகளும் பகுதி பகுதியாக விடுவிக்கப்படுகின்றன. எனினும், மக்களின் எதிர்பார்ப்புக்கள் இன்னும் அதிகமாகவே உள்ளன.” – என்று தெரிவித்தார்.

மேலும், மாகாண சபையின் அதிகார வரம்புகள், செயற்பாடுகள் மற்றும் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

54 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

47 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

56 0 0