உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வன்னி மாவட்ட ஆசிரியர் இடமாற்றப் பிரச்சனை தொடர்பாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சத்தியலிங்கம் எம்.பி…!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

வன்னி மாவட்டங்களில் நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைகள் தொடர்பில் ப. சத்தியலிங்கம் அவர்கள் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.இன்று (18.02.2026) பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கல்வி அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்விடயத்தை முன்வைத்தார்.

அவர் தெரிவித்ததாவது, ஆசிரியர் இடமாற்றங்களின்போது தெளிவான மற்றும் சிறப்பான இடமாற்றக் கொள்கை இல்லாததே பல சிக்கல்களுக்கு காரணமாக உள்ளது. ஏனைய திணைக்களங்களில் வருடாந்த இடமாற்றங்களின்போது நீண்டகாலம் சேவையாற்றி இடமாற்றம் பெறத் தகுதியானோர் எண்ணிக்கையும், வெற்றிடங்களின் எண்ணிக்கையும் இணைத்து அறிவிக்கப்படுகின்றது.

ஆனால் கல்வித்துறையில் வெற்றிடங்களின் எண்ணிக்கை மட்டுமே அறிவிக்கப்படுவதால் நீண்டகாலமாக சேவையாற்றி இடமாற்றம் எதிர்பார்க்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவாக மாணவர்களும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.ஆகையால் இடமாற்ற நடைமுறைகளில் தகுதியானோர் எண்ணிக்கையும், வெற்றிடங்களின் எண்ணிக்கையும் இணைத்து கணக்கிடும் முறை பின்பற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


இதற்கு பதிலளித்த பிரதமர், இது சிறந்த யோசனை எனக் குறிப்பிட்டு, இயன்றவரை இவ்வாண்டிலேயே நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாகவும், இல்லையெனில் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுத்தி ஆசிரியர் இடமாற்றங்களில் எதிர்கால சிக்கல்கள் தவிர்க்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.தொடர்ந்து வடக்கு மாகாணத்தில் கல்வித் திணைக்களத்தின் கீழ் பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்டும் பூரணப்படுத்தப்படாமல் உள்ள கட்டிடங்கள் தொடர்பிலும் உறுப்பினர் கவனம் செலுத்தினார்.

கடந்த காலங்களில் மாகாணப் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட கட்டிடங்களில் பல இன்னும் நிறைவுபெறாமல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.குறிப்பாக வவுனியாவில் அமைந்துள்ள சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் தொழிநுட்பக் கல்விக்காக அமைக்கப்பட்ட ஆய்வுகூடம் 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில் பயன்படுத்த முடியாமல் உள்ளதாகவும், மீதமுள்ள பணிகளை நிறைவு செய்தால் மாணவர்கள் பயன்பெற முடியும் எனவும் தெரிவித்தார்.இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

43 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

53 0 0
இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0