உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கை – சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு இணக்கம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சுவிட்ஸர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வால்ட் ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்து, பிரதமர் தனது உத்தியோகபூர்வ சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவதுடன், சுவிட்ஸர்லாந்தின் உலகத்தரம் வாய்ந்த தொழிற்கல்வி மற்றும் பயிற்சி முறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

சுவிட்ஸர்லாந்தில் நடைமுறையிலுள்ள நவீன தொழிற்பயிற்சித் தொழில்நுட்பங்கள் மற்றும் அந்த முறைகளை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

கல்வி மற்றும் பயிற்சித் துறையில் அறிவைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் இலங்கையின் மனிதவள மேம்பாட்டுக்குச் சுவிட்ஸர்லாந்து வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு மற்றும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

41 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

53 0 0
இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0