உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பலாலி வீதியில் விபத்து; குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுகிர்தர் (48 வயது) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த 14 ஆம் திகதியன்று பலாலி வீதியில் மேற்படி குடும்பஸ்தர் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பிறிதொரு உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அவர், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

41 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

53 0 0
இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0