உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வட மாகாணத்தில் அரச, தனியார் போக்குவரத்தில் பாரிய மாற்றம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

வட மாகாண பகுதிகளில் அரச, தனியார் போக்குவரத்து சேவையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்களுக்கு தரமான சேவையை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று (18) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
போக்குவரத்து என்பது நாட்டின் முதுகெலும்பாக அமைந்துள்ள ஒரு விடயமாக காணப்படுகின்றது. போக்குவரத்து உரிய முறையில் இருந்தால் மாத்திரமே பொருளாதாரமும் வெகுவாக வளர்ச்சியடையும்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது போக்குவரத்து அமைச்சர் ஊடாக பல்வேறு விடயங்களை முன்னெடுத்து வருகின்றது.

அமைச்சர் நேரடியாக விஜயங்களை மேற்கொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது.

வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையை நான் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு விடயங்களை முன்னெடுத்து வருகின்றேன்.

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரச, தனியார் போக்குவரத்தில் பாரியதொரு மாற்றத்தை கொண்டு வந்து மக்களுக்கு தரமான போக்குவரத்து சேவை வழங்கும் முகமாக பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.

தரமான போக்குவரத்து சேவை ஒன்றை முன்னெடுக்க ஜி.பி.எஸ் மற்றும் சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அரச தனியார் போக்குவரத்தில் புதிய திட்டங்களும் அமுல்படுத்தப்பட உள்ளது.

27 சங்கங்கள் வட மாகாணத்தில் இயங்கி வரும் நிலையில் ஒவ்வொரு சங்கங்களும் தனியான யாப்பின் அடிப்படையில் இயங்கி வருகின்றது. குறிப்பாக வடக்கு மாகாண போக்குவரத்துக்கான தனி யாப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

41 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

53 0 0
இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0