உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து; சட்டத்தை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான ‘நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம்’ நாடாளுமன்றத்தில் 152 மேலதிக வாக்குகளால் அமோகமாக நிறைவேற்றப்பட்டது.

நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இந்தச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இந்தச் சட்டமூலம் மீதான விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் ஆகியோரால் சில திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், அந்தத் திருத்தங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் நிராகரித்ததைத் தொடர்ந்து, எவ்வித மாற்றங்களுமின்றி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகரின் சான்றுரைப்படுத்தலைத் தொடர்ந்து, இது ‘2026 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டம்’ என உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம்,
1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் முழுமையாக நீக்கப்படுகின்றது.

தற்போது ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் மற்றும் எதிர்காலத்தில் அதற்கு உரித்துடையவர்கள் என அனைவருக்கும் இனிவரும் காலங்களில் அந்த கொடுப்பனவு நிறுத்தப்படும்.

இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நீண்டகால வரப்பிரசாதம் ஒன்று முடிவுக்கு வந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

54 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

47 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

56 0 0