உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
48 பார்வைகள்

சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற இந்தோனேசியாவின் யானை சவாரிக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாகத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் நாடு தழுவிய அளவில் யானை சவாரிக்குத் தடை விதித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்தோனேசியா பெற்றுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘பீட்டா’ அமைப்பு வெளியிட்ட இரகசிய விசாரணை காணொளிகள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

அந்த காணொளியில், சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து செல்லும் யானைகள் கூர்மையான இரும்புத் தோட்டியால் குத்தப்படுவதும், சங்கிலியால் பிணைக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுவதும் அம்பலமானது.குறிப்பாக பாலி தீவில் உள்ள புகழ்பெற்ற யானை சரணாலயத்தில் இத்தகைய அநாகரிகமான முறைகள் கையாளப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்தோனேசிய வனத்துறை அமைச்சு யானைச் சவாரிக்கு நாடு தழுவிய தடையை விதித்துள்ளது.யானைகளின் உடல் நலம் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இனி சுற்றுலாத் துறையில் யானைகளைச் சவாரிக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது’ என அரசாங்கம் அறிவித்துள்ளது.அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, பாலியின் புகழ்பெற்ற மேசன் யானை சரணாலயம் மற்றும் பாலி மிருகக்காட்சிசாலை போன்ற நிறுவனங்கள் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி முதல் சவாரிகளை நிறுத்திவிட்டன.

‘யானைகளுக்கு இயற்கையான சூழலை வழங்குவதற்காக நாங்கள் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பிக்கிறோம்’ என மேசன் யானை சரணாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.எனினும், இத்தடையானது யானைகளைத் தொடுதல், குளிப்பாட்டுதல் மற்றும் அவற்றிற்கு உணவளித்தல் போன்ற பிற சுற்றுலா நடவடிக்கைகளுக்குப் பொருந்தாது எனக் கூறப்படுகிறது.|இந்தோனேசிய அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை சர்வதேச விலங்கு நல அமைப்புகள் கொண்டாடுகின்றன. பீட்டா அமைப்பின் ஆசியாவிற்கான தலைவர் ஜேசன் பேக்கர் தெரிவிக்கையில்,

‘இந்தோனேசியா முன்மாதிரியான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இந்தியாவைப் போலவே நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளும் இந்த வழியைப் பின்பற்ற வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.சமூக ஊடகங்களில் இந்தப் பதிவைப் பார்த்த அவுஸ்திரேலிய மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், ‘இது மிக நீண்ட காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய தீர்மானம்’ எனவும், ‘மனிதர்களின் பொழுதுபோக்கிற்காக விலங்குகள் துன்புறுத்தப்படக் கூடாது’ எனவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0