உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சிறுமிகளை ஏமாற்றி துஷ் – பிரயோகத்துக்கு முயற்சித்த முச்சக்கரவண்டி சாரதி சிக்கினார்.!

இலங்கை செய்திகள் 50 நிமிடங்கள் முன்
26 பார்வைகள்

கிளிநொச்சியிலிருந்து காரைநகர் செல்ல வந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை ஏமாற்றி அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து காரைநகர் செல்லும் நோக்கில் பேருந்தில் வருகை தந்த இரண்டு சிறுமிகள், யாழ்ப்பாணத்தில் இறங்கி காரைநகருக்குச் செல்ல முற்பட்டுள்ளனர்.

அந்தச் சமயத்தில் இரண்டு சிறுமிகள் மீதும் சந்தேகம் கொண்ட சில முச்சக்கரவண்டி சாரதிகள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்க முற்பட்டதை அவதானித்த மற்றொரு முச்சக்கரவண்டி சாரதி, அதனைச் சிறுமிகளிடம் கூறித் தனது முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார்.

பேருந்து நிலையத்திலிருந்து காரைநகருக்குக் கூட்டிச் செல்வதாக ஏமாற்றி அழைத்துச் சென்ற சாரதி, சிறுமிகளை மாதகல் பிரதேசத்தின் ஒரு மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கே ஒரு சிறுமியின் ஆடைகளைக் களைந்து துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்தபோது, இரண்டாவது சிறுமி தனது கையில் இருந்த பொருளால் சாரதியைத் தாக்கிவிட்டுப் பலத்த குரலில் கூச்சலிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சாரதி, ஒரு சிறுமியை மட்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றியவாறு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

அந்தப் பகுதியில் கூடிய பொதுமக்களிடம் இரண்டாவது சிறுமி நடந்ததைக் கூறியமையைத் தொடர்ந்து, உடனடியாக இளவாளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

தகவலறிந்த பொலிஸார் விரைந்து சென்று ஒரு சிறுமியை மீட்டனர்.

சிறிது நேரத்தில் இரண்டாவது சிறுமியைப் பொலிஸ் நிலையத்தில் இறக்கிவிட முயன்ற முச்சக்கரவண்டி சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் நேற்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பரிசோதனையில் சிறுமிகள் பாதிக்கப்படவில்லை எனக் கண்டறியப்பட்டபோதும், முச்சக்கரவண்டி சாரதி துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டதனால் அவர் பொலிஸாரால் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து நீதி அமைச்சருடன் சுவிஸ் பதில் தூதுவர் பேச்சு.!

நீண்டகாலமாகப் பதில்களுக்காகக் காத்திருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கான நகர்வுகள் தொடர்பிலும்…

64 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு; குற்றவாளிகள் கடுங்காவல் சிறையில் அடைப்பு.!

ஈஸ்டர் படுகொலை வழக்கு தொடர்பான முக்கிய தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதிகாலை 2.00…

16 0 0
இலங்கை செய்திகள்

பழிவாங்கல் காரணமாக ஊதியம் இடைநிறுத்தம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆசிரியர் முறைப்பாடு.!

யாழ். வடமராட்சியைச் சேர்ந்த இரசாயனவியல் ஆசிரியர் ஒருவர், பழிவாங்கல் நடவடிக்கை காரணமாக முறையான முன்னறிவிப்பு எதுவும் இன்றி தனது ஊதியம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…

20 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் ஜனநாயகத்தை அழிக்கும் அரசியல் சூழ்ச்சி.!

அரசமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி தனது முன்னைய நிலைப்பாட்டிலேயே உறுதியாக நிற்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர்…

14 0 0