உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

அனோஜனின் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்!!

இலங்கை செய்திகள் 47 நிமிடங்கள் முன்
28 பார்வைகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை இளைஞன் அனோஜன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அனோஜன் சவுதி அரேபியாவில் அந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாடு சென்று அனோஜனின் உயிரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அனோஜனின் விவகாரத்தை காற்பந்து போல் அரசியல் தலைவர்களோ, கட்சிகளோ அல்லது வேறு தரப்பினரோ பயன்படுத்த வேண்டாம் என மிகவும் வினயமாக கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்று எனவும் அரசாங்கம் சகல வலிகளிலும் அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமே தவிர நான் தான் முதலில் காப்பாற்றினேன் நான் தான் முதலில் பேசினேன் என்ற போட்டி இருக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனோஜன் விவகாரத்தை அரசாங்கம் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய பிரச்சினைகளில் போன்று இந்த பிரச்சினையை அணுக வேண்டாம் என அரசியல் கட்சி தலைவர்களிடம் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அரசியல் துருப்புச் சீட்டாக பயன்படுத்த வேண்டாம் எனவும் இது ஒருவரின் வாழ்க்கை பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அரசாங்கம் ராஜதந்திர ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் இந்த பிரச்சனையை அணுகி வருவதாக டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

“ஸ்மைல் பிளீஸ்” : சாமர சம்பத் எம்.பி ஜனாதிபதியை வலியுறுத்தல்

ஜனாதிபதி பொதுக்கூட்டங்களில் முன்னாள் தலைவர்களை விமர்சித்து கோபமாக உரையாற்றுவதைத் தவிர்த்து, மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் மக்களை சந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில்…

29 0 0
இலங்கை செய்திகள்

அநோஜனின் விடுதலையை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு ஆளுநர் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை…

28 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சை சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு!

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில்…

30 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் கஜேந்திரகுமார் கைது

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் கஜேந்திர குமார், நிதி மோசடி மற்றும் போலி ஆவணத் தயாரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை இன்று…

44 0 0