உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கனடாவில் பதற்றத்ததை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
50 பார்வைகள்

கனடா பாடசாலை ஒன்றில் துப்பாக்கியால் சுட்டு 6 பேர்களை கொலை செய்தவர், சொந்த தாயார் மற்றும் சகோதரரையும் படுகொலை செய்துள்ளதை கனடா பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.சந்தேக நபர் 18 வயதுடைய Jesse Van Rootselaar என்றும், அவர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாடசாலையை விட்டு வெளியேறியவர் என்றும் தெரியவந்துள்ளது.சந்தேக நபர் ஒரு ஆணாகப் பிறந்து சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாறியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அதனாலையே, தாக்குதலில் ஈடுபட்டவர் பெண் என அறிவித்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளனர்.

பலியானவர்களில் 12 முதல் 13 வயதுக்குட்பட்ட ஐந்து மாணவர்களும், சந்தேக நபரின் 11 வயது வளர்ப்பு சகோதரனும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், செவ்வாய்க்கிழமை மதியம் மேல்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, வான் ரூட்ஸீலார் தனது தாயார் ஜெனிஃபர் மற்றும் சகோதரர் எம்மெட்டை அவர்களது வீட்டில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவரது மனநலம் தொடர்பாக பல ஆண்டுகளாக அவரது வீட்டிற்கு சென்று விசாரணை முன்னெடுத்து வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம், கனடாவில் பாடசாலைகளில் நடந்த இரண்டாவது மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து இன்றையதினம்(12)வியாழக்கிழமை அங்கு துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0