நீண்ட காலத்துக்குப் பின்னர்; இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்.!
இந்தியா – அமெரிக்க இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் நீண்ட காலத்துக்குப் பின்னர் முடிவாகியுள்ளது.அதனால், இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத பரஸ்பர வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது.மேலும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரியும் நீக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இனி ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கினால் மீண்டும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இவ் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் இந்தியாவிலிருந்து சுமார் நான்கு இலட்சம் கோடி மதிப்புடைய பொருட்கள் வரி இல்லாமல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யபடவுள்ளது.
அதேபோல் அமெரிக்க பொருட்களும் வரியில்லாமல் இறக்குமதி செய்யப்படவுள்ளது.இந்நிலையில் இந்தியாவுடனான வர்த்த ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.